தொழிற்சங்கப் போராட்டங்களினை முன்னெடுப்பதால் சைட்டம் மூடப்படாது – லக்ஷ்மன்..

தொழிற்சங்கப் போராட்டங்களினை முன்னெடுப்பதன் ஊடாக நீதிமன்ற தீர்ப்பை மாற்றியமைக்க முடியாது என அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.

மாலபே, சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரி பிரச்சினையை முன்னிலைப்படுத்தி அரசாங்கத்தின் ஸ்தீரத்தன்மையை சீர்குலைக்க சிலர் முயற்சிக்கின்றனர் என சுட்டிக்காட்டியுள்ளார்.

மாலபே தனியார் மருத்துவ கல்லூரிக்கு நீதிமன்றம் சட்ட ரீதியான அங்கீகாரம் வழங்கியுள்ள நிலையில், குறித்த தனியார் மருத்துவ கல்லூரியை மூடுவதற்கு அரசாங்கத்திற்கு எவ்வகையிலும் முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவ்வாறு தனியார் மருத்துவ கல்லூரியை மூடினால் நீதிமன்றை அவமரியாதை செய்ததாக அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்தப்படும் என தெரிவித்துள்ள அவர் மாலபே தனியார் மருத்துவ கல்லூரி ஊடாக இலவச கல்விக்கு பாதிப்பு ஏற்படும் என சிலர் பிரச்சாரம் செய்து வரும் போதும், அவ்வாறான எவ்வித பாதிப்புக்களும் ஏற்படக்கூடிய சாத்தியமில்லை எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

(rizmira)