தொழிற்சங்க நடவடிக்கைகள் குறித்து ஆராய GMOA அவசரமாக கூடுகிறது..

வைத்திய சபை மற்றும் வைத்திய கட்டளைச் சட்டம் என்பவைத் தொடர்பில், சுகாதார அமைச்சரால் கொண்டுவரவுள்ள தீர்மானத்தை தோற்கடிப்பது குறித்த முடிவுகளை எடுப்பதற்காக, அரச வைத்திய அதிகாரிகள் சங்கமானது (GMOA) இன்று(18) ஒன்நு கூடவுள்ளதாக குறித்த சங்கமானது தெரிவித்துள்ளது.

குறித்த தீர்மானத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட வேண்டிய தொழிற்சங்க நடவடிக்கைகள் குறித்து ஆராய அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு சபை கூடவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.