வாழ்க்கைச் செலவு குழு ஊடாக, அத்தியாவசியப் பொருட்களுக்கான விலைகள் அதிகரிப்புக்கு அண்மித்ததாக, அரச பணியாளர்களின் கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட வேண்டுமென, அரச தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
5 பேர் அடங்கிய குடும்பம் ஒன்றுக்கு மாதாந்தம் 65,000 ரூபாய்க்கு அதிகமான பணம் செலவாவதாகவும், அரசாங்க தொழிற்சங்கத்தின் பிரதான செயலாளர் அஜித்.கே. திலகரட்ன தெரிவித்துள்ளார்.
இம்முறை அரசாங்கம் முன்வைக்கவுள்ள வரவு செலவுத் திட்டத்தில் தமது கோரிக்கைகளை அரசாங்கம் நிறைவேற்றாவிட்டால் பாரிய தொழிற்சங்க நடவடிக்கை ஒன்றை முன்னெடுக்க தயாராகவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.