தொழிற்சங்க நடவடிக்கையை கைவிடத் தீர்மானித்தது GMOA…

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று(10) மேற்கொள்ளவிருந்த தொழிற்சங்க நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

நேற்று(09) சுகாதார அமைச்சின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் போது சாதகமான பதில் கிடைக்கப் பெற்றதாகவும் அச்சங்கம் அறிவித்துள்ளது.

வைத்திய அதிகாரிகள் நியமனம் தொடர்பில் இடம்பெற்றுள்ள முறைகேடுகளை நீக்குமாறு கூறியே ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.