தொழிற்துறைத் திணைக்களமானது நிதி நெருக்கடியில் உள்ளது என அதிகாரிகள் குற்றச்சாட்டு..

ஊழியர்களின் கொடுப்பனவுகளை செலுத்த முடியாது தொழிற்துறைத் திணைக்களமானது நிதி நெருக்கடியில் உள்ளது என அரச சேவை தொழிலாளர் உத்தியோகத்தர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.

முறையா வழங்கவுள்ள உள்ள பயண கொடுப்பனவுகளை விரைவாக செலுத்தப்படாவிட்டால், ஜனவரி மாதத்தில் தொழிலாளர்கள் தமது பணிகளில் இருந்து விலகி இருப்பதாக சங்கத்தின் தலைவர் ஐ.சி.கமகே சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் தொழில்துறை திணைக்களத்தில் வினவிய போது, தொழிற்சங்கங்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் போன்று எந்தவித நிதி நெருக்கடியும் இல்லை என தொழில் ஆணையாளர் நாயகம் ஆர்.பீ.ஏ.விமலவீர தெரிவித்திருந்தார்.

நிலவும் முரண்பாடுகளை நிவர்த்தி செய்ய தற்போது நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.