தொழிலாளர் குடியிருப்பு தொகுதியில் தீ விபத்து…

அக்கரப்பத்தனை பெல்மோரல் தோட்டத்தில் இன்று(13) காலை ஏற்பட்ட தீ விபத்தில் 12 தொழிலாளர் குடியிருப்புகள் முற்றாக எரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த இந்த தீ விபத்து காரணமாக லயன் தொகுதியில் அமைந்திருந்த 12 வீடுகள் சேதமடைந்ததுடன், 12 குடும்பங்களை சேர்ந்த 50க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெருமளவிலான வீட்டு உபகரணங்கள், பெறுமதியான ஆவணங்கள், தங்க நகைகள், பாடசாலை மாணவர்களின் சீருடைகள் மற்றும் பாடப் புத்தகங்கள் என பெருமளவிலான பொருட்கள் தீக்கிரையாகியுள்ளன.

தீ ஏற்பட்டதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

தீ ஏற்பட்டதற்கான காரணம் குறித்து அக்கரப்பத்தனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.