(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்காலத்தில் அமையவுள்ள தனது ஆட்சியில் தொழில் வல்லுனர்களை தவிர வேறு எவருக்கும் அரச நிறுவனங்களில் பதவிகளை வகிக்க வாய்பளிக்கபோவது இல்லை என ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மஹரகம பகுதியில் நேற்று(31) இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.