இந்தியாவில் கடந்த 2008-ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விளம்பர தூதராக இருந்தவர் தான் நடிகை ராய் லக்ஷ்மி. அப்போது டோனியும், லக்ஷ்மி ராயும் பல்வேறு இடங்கள் ஒன்றாக சென்று வந்தனர்.
இருவரும் ஒன்றாக பைக்கில் செல்வது போன்ற புகைப்படங்கள் எல்லாம் வெளியாகியதால், இருவரும் காதலிப்பதாக செய்திகள் வெளியாகின.
ஆனால் அவர்களின் உறவு நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. அதன் பின் அது தொடர்பாக பல்வேறு வதந்திகள் வந்த போதும், லக்ஷ்மி ராய் அது குறித்து அதிகம் பேசாமல் இருந்தார்.
இந்நிலையில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவரிடம் டோனி பற்றி கேட்கப்பட்டது, உடனே லக்ஷ்மி ராய் “யார் அவர்” என்று கேட்டதால் அங்கிருந்தவர்கள் அனைவரும் குழம்பி போய் விட்டனர்.
அப்போது அவர், தான் டோனியை மதிப்பதாகவும் இப்படிப்பட்ட விஷயங்கள் இனி முடிவு கட்டப்பட வேண்டும் என்றும் டோனி திருமணமாகி குடும்ப வாழ்க்கையை தனது குழந்தையுடன் மகிழ்ச்சியாக நடத்தி வருகிறார். எனவே இனி தொடர்புபடுத்தி பேசும் விஷயங்களைத் தவிர்க்க வேண்டும் என்றும் தங்கள் இருவருக்கிடையேயான நட்பானது நீண்ட காலத்திற்கு முந்தையது, சில வேளைகளில் இவற்றையெல்லாம் கடந்து நகர வேண்டிய தேவை உள்ளது என கூறியுள்ளார்.
மேலும் தனக்கும் டோனிக்கும் திருமணம் என்று செய்திகள் பரப்பப்பட்டது இருவருக்குமிடையேயான உறவை தர்மசங்கடத்துக்குள் தள்ளியது எனவும் தெரிவித்துள்ளார்.
(riz_mira)