தோற்றதற்கு பின்னர் சோகமாக இருப்பதற்கு பதிலாக அனைவருமே செம ஜாலியாக சிரித்தனர் – ஆப்கானிஸ்தான் அணி உலகக் கிண்ணத்தில் வேணுமென்றே தோற்றது

(FASTGOSSIP | COLOMBO) – 2019 உலக கிண்ணப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியின் மூத்த வீரர்கள் சரியாக விளையாடவில்லை எனவும் எனது பேச்சை யாருமே கேட்கவில்லை என்றும் அணியின் தலைவர் குல்பதின் நயீப் குற்றச்சாட்டு ஒன்றினை முன்வைத்துள்ளார்.

இது தொடர்பில் ஆப்கானிஸ்தான் அணியின் தலைவர் கருத்துத் தெரிவிக்கையில்;

“.. உலக கிண்ண தொடரில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய அணி என்று சொன்னால் அதை ஆப்கானிஸ்தான் எனலாம். ஆனால் அனைத்து போட்டிகளிலும் தோற்று, புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை தான் பெற்றது.

உலக கிண்ணத்திற்கு முன், திடீரென ஆப்கானிஸ்தான் தலைவர் அஸ்கர் ஆப்கான் நீக்கப்பட்டு என்னை தலைவனாக்கினர். அதில் உடன்பாடு இல்லை என்று கூறி அப்போதே ஆப்கானிஸ்தான் வீரர்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். நலன் கருதி நடவடிக்கை ஆனால் அணியின் எதிர்கால நலனை கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கிரிக்கெட் வாரியம் கூறியது.

அதனை ஏற்றுக் கொண்டு அனைவரும் செயல்பட வேண்டும் என்றும் வீரர்களுக்கு அறிவுறுத்தி இருந்தது. தலைமை நீக்கம் இதையடுத்து என் தலைமையிலான அணி உலக கோப்பையில் சோபிக்கவில்லை. அதன் எதிரொலியாக, தலைமை பதவியிலிருந்து நான் நீக்கப்பட்டு, டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய 3 அணிகளுக்குமே ரஷித் கான் தலைவராக நியமிக்கப்பட்டார்..

மேலும், சீனியர் வீரர்கள் வேண்டுமென்றே உலக கிண்ணத்தில் சரியாக ஆடவில்லை. ஒரு தலைவன் என்ற முறையில் எனது பேச்சை யாருமே கேட்கவில்லை. ஜாலியாக சிரித்தனர் ஒவ்வொரு போட்டியிலும் தோற்றதற்கு பின்னர் சோகமாக இருப்பதற்கு பதிலாக அனைவருமே செம ஜாலியாக சிரித்துக் கொண்டிருந்தனர். யாரையாவது பவுலிங் அழைத்தால் கூட, என்னை கண்டுகொள்ளவில்லை…” என தெரிவித்துள்ளார்.