இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா அணியானது இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை முழுமையாக வென்று இலங்கை அணியினை நேற்று(14) வெள்ளையடித்தது.
குறித்த வரலாற்றுத் தோல்வி குறித்து இலங்கை அணியின் தலைவர் தினேஷ் சந்திமால் ஊடக முன்னிலையில் கருத்துத் தெரிவிக்கையில்;
“..கடந்த எட்டு வருடங்களில் சர்வதேச போட்டிகளில் நான் சந்தித்த கடினமான தொடர் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.
இத்தொடர் போட்டிகள் அனைத்தும் 5 நாட்கள் செல்லவில்லை. அதுவே தோல்விக்கு முக்கிய காரணம். என்னுடைய வாழ்க்கையில் இது மிகவும் மோசமான தொடர் என்று கூறலாம்.
ரசிகர்களிடம் அணியின் தலைவர் என்ற முறையில் தோல்விக்கான பொறுப்பை ஏற்றுக் கொள்கிறேன். வீரர்களின் மனநிலை சோர்வாக இருக்கும் போது, ரசிகர்களின் ஆதரவும், அந்த கைதட்டல்களும் தான் அந்த வீரர்களை ஊக்கப்படுத்தும். அதனால் ரசிகர்களின் ஆதரவு தங்களுக்கு தேவை.
இதில் இருந்து மீண்டும் விரைவில் வெளியே வருவோம். வரும் காலங்களில் நல்ல ஒரு முடிவை கொடுப்போம்..” என்று கூறியுள்ளார்.
(rizmira)