அவுஸ்திரேலிய அணியினரை டெஸ்ட் தொடரில் 3-0 எனும் கணக்கில் தோல்வியடையச் செய்ய இலங்கை அணியினரால் நேற்றைய தினம்(17) முடிந்திருந்தது.
நேற்றையதினத்திலும், அதேபோன்று டெஸ்ட் போட்டியிலும் சிறப்பு வீரராக விக்கெட் 28இனை கைப்பற்றி ரங்கன ஹேரத் இடம்பிடித்திருந்தார்.
காலம் காலமாக உலகிலேயே ICC Test Rankings இல் முதல் தர வரிசையில் கொடிகட்டிப்பறந்த அவுஸ்திரேலிய அணியானது நேற்றைய(17) இறுதி டெஸ்ட் போட்டியின் தோல்வியுடன் 3வது இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளது.
இதன்படி உலகிலேயே முதலிடம் பெற்றுள்ள டெஸ்ட் அணியினராக இந்தியா தற்போது முன்னேறியுள்ளது.
இலங்கை அணியானது 10புள்ளிகளைப் பெற்று 6வது இடத்திற்கு முன்னேறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
