‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ க்கு ஆப்பு

”த்ரிஷா இல்லனா நயன்தாரா” படத்தை ரிலீஸ் செய்ய  சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’  பட தயாரிப்பாளர் சி.ஜே.ஜெயகுமார், மீது ஆனந்த விகடன் தயாரிப்பு நிறுவனம் வழக்கு தொடர்ந்திருந்தது.

அந்த வழக்கில், ரூ.75 லட்சம் கடன் தர வேண்டிய தயாரிப்பாளர் சி.ஜே.ஜெயக்குமார், கொடுத்த காசோலைகளும் வங்கியில் பணம் இல்லாமல் திரும்பி விட்டது. இந்த நிலையில், தங்களது பணத்தை பயன்படுத்தி, தயாரிக்கப்பட்ட ”த்ரிஷா இல்லனா நயன்தாரா” படத்தை வெளியிட மற்றும் விற்க தடை விதிக்க உத்தரவிட கோரி, மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, 4.6.2015-க்குள் கடன் தொகை செலுத்த சி.ஜெ.ஜெயக்குமார் உறுதியளிக்க வேண்டும் எனவும் இல்லையெனில் ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படம் ஜப்தி செய்யப்படும் எனவும் உயர்நீதிமன்றம் உத்திரவிட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆனந்த விகடன் நிறுவனம் சார்பில் வாதிட்ட வழக்கறிஞர்,

கடன் தொகைக்கு சி.ஜெ.ஜெயக்குமார் உரிய உறுதியளிக்கவில்லை, என்று நீதிபதியிடம் தெரிவித்தார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, , இரண்டு வாரத்திற்குள் ரூ.75 லட்சம் பாக்கிக்கு ஈடாக சொத்து தரவேண்டும் என்றும்,  ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படத்தை வெளியிட தடைவிதித்தும் உத்தரவிட்டார்.