த்ரிஷா வேடத்தில் சமந்தா…

கடந்த வருடம் விஜய் சேதுபதி திரிஷா நடிப்பில் வெளியான 96 படம் நல்ல வரவேற்பை பெற்றது.

பள்ளி பருவத்தில் தொடங்கும் காதல் கல்லூரிவரை தொடர்வதும் அதன்பிறகு நடக்கும் சம்பவங்களையும் மையமாக வைத்து இதன் கதை அமைக்கப்பட்டிருந்தது.

இப்படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய முடிவு செய்யப்பட்டது. தமிழில் 96 படத்தை இயக்கிய பிரேம்குமாரே தெலுங்கு படத்தை இயக்குகிறார்.

விஜய் சேதுபதி கதாபாத்திரத்துக்கு சர்வானந்த் தேர்வான நிலையில் திரிஷா கதாபாத்திரத்தில் சமந்தா நடிக்க தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

முன்னதாக 96 படம் வெளியானபோது இப்படத்தை தெலுங்கில் ரீமேக் செய்யக்கூடாது என்று குறிப்பிட்டிருந்தார்.

அதன் ஒரிஜினாலிட்டியை அப்படியே தரமுடியாது என்ற எண்ணத்தில் அவர் தனது கருத்தை வெளியிட்டிருந்த நிலையில் தற்போது சமந்தாவே அப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தகக்து.