நகங்கள் கைகளின் அழகை மெருகூட்டுகின்றன. ஆனால் சிலருக்கு நகங்கள் எவ்வளவு தான் பாதுக்காப்பாக இருந்தாலும், அடிக்கடி உடைந்துவிடும். இது போன்ற நகங்கள் உடைவதை எப்படி சரி செய்யலாம் என்பது பற்றி இந்த பகுதியில் காணலாம்
ஆலிவ் ஆயில்:
உங்களது நகங்களை எக்ஸ்ட்ரா -வெர்ஜின் ஆலிவ் ஆயிலில் தினமும் 10-15 நிமிடங்கள் நனைத்து எடுங்கள். இதனை தினமும் ஒரு மாதத்திற்கு செய்ய வேண்டியது அவசியமாகும்.
பாதாம் எண்ணெய்:
பாதாம் எண்ணெய்யும் கூட நகங்கள் உடைவதில் இருந்து உங்களை பாதுகாக்கிறது. இதில் அதிகளவு ஆன்டி- ஆக்ஸிடண்டுகள் உள்ளன. மேலும் இதில் விட்டமின் இ, ஏ, பி1, பி2 மற்றும் பி6 ஆகியவை உள்ளன். சிறிதளவு பாதாம் எண்ணெய்யுடன், சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து நகங்களுக்கு மசாஜ் செய்ய வேண்டும்
கை உறை:
பாத்திரம் கழுவும் போதும், தோட்ட வேலைகளை செய்யும் போதும் கை உறை அணிந்து கொள்வதால், பாத்திரம் கழுவும் போது படும் சோப் அல்லது கெமிக்கல்கள் கையில் படுவதில் இருந்து தப்பிக்கலாம்.
விட்டமின்:
உங்களது உணவில் தினமும் விட்டமின் ஏ மற்றும் சி-யை போதுமான அளவு எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். இவை நகங்களை பாதுகாக்கும் தன்மை கொண்டவை.
உணவுகள்:
உங்களது உணவில் அடிக்கடி முட்டை, காலிபிளவர், முழு தானியங்கள், அவோகேடா போன்றவற்றை தவறாமல் சேர்த்துக்கொள்ளுங்கள்.