கண்டி நக்ல்ஸ் மலைத்தொடரை பார்வையிட சென்ற ஏழு பேர் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
ஹோமாகம பகுதியை சேர்ந்தவர்களே காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றிரவு(08) 119 பொலிஸ் அவசர அழைப்பு பிரிவிற்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய ரங்கல , உடுதும்பர , ரத்தொட மற்றும் லக்கல பொலிசார் இணைந்து காணாமல் போயுள்ளவர்களை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.