நடன இயக்குநரை கரம்பிடிக்கிறார் பிரபல நடிகை…

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளுள் ஒருவரான சாந்தினியும், நடன இயக்குநரான நந்தாவும் காதலித்து வந்த நிலையில், இருவரது திருமணம் எதிர்வரும் 12 ஆம் திகதி நடைபெறவிருக்கிறது.

பாக்யராஜ் இயக்கத்தில் சாந்தனு நடிப்பில் உருவான சித்து +2 படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் சாந்தினி தமிழரசன். வஞ்சகர் உலகம், ராஜா ரங்குஸ்கி, பில்லா பாண்டி, வண்டி உள்ளிட்ட படங்கள் சமீபத்தில் வெளியாகின.

இந்த நிலையில், சாந்தினிக்கும் அவரது காதலரும், நடன இயக்குநருமான நந்தாவுக்கும் இருவீட்டாரது சம்மதத்துடன் திருமண நிச்சயசதார்த்தம் நடந்து முடிந்தது.

எதிர்வரும் 12 ஆம் திகதி திருப்பதியில் வைத்து திருமணம் நடைபெற இருக்கிறது.

திருமணம் குறித்து சாந்தினி கூறியிருப்பதாவது,
நந்தாவும் நானும் 9 வருடங்களாக காதலித்து வந்தோம். சினிமாவில் நல்ல நிலையில் இருக்கும்போதே திருமணம் செய்துகொள்வது என்று முடிவெடுத்தோம். திருமணத்துக்குப் பிறகும் தொடர்ந்து படங்களில் நடிப்பேன் என்று கூறியுள்ளார்.