நடிகர்கள் மவுனப் போராட்டம் – புறக்கணித்த முன்னணி நடிகைகள்… (photos)

காவிரி மற்றும் ஸ்டெர்லைட் பிரச்சினைகளுக்காக சினிமாத்துறையினர் நடத்திய போராட்டத்தில் முன்னணி நடிகைகள் பலர் கலந்து கொள்ளவில்லை.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தியும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட கோரியும் தமிழ் திரையுலகினர் சார்பில் மவுன போராட்டம் சென்னையில் நடைபெற்றது.

இதில் ரஜினி, கமல் உள்ளிட்ட பல நடிகர்கள் கலந்துக் கொண்டனர். மேலும் தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்கள், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், பெப்சி உள்ளிட்ட சினிமா அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

நடிகர் சங்க தலைவர் நாசர் தலைமையில் நடக்கும் இந்த போராட்டத்தில் நடிகர் விஜய் முதல் ஆளாக கலந்து கொண்டுள்ளார். மேலும், விக்ரம், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி, விஷால், கார்த்தி, பார்த்திபன், சிவகுமார் உள்ளிட்ட பல நடிகர்களுக்கும் ரேகா, தன்ஷிகா உள்ளிட்ட நடிகைகளும், இசையமைப்பாளர் இளையராஜா, பாடலாசிரியர் வைரமுத்து, மதன் கார்க்கி உள்ளிட்டோரும் கலந்துக் கொண்டனர்.

ஆனால், இந்தப் போராட்டத்தில் முன்னணி நடிகைகளாக வலம் வரும் திரிஷா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சமந்தா, அமலாபால் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ளவில்லை. ஸ்ரீபிரியா, ரேகா, சத்யப்பிரியா, கஸ்தூரி உள்ளிட்ட மூத்த நடிகைகளும், தன்ஷிகா, ரித்விகா என சில இளம் நடிகைகளும் கலந்து கொண்டனர்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளாக இருக்கும் பெரும்பாலானவர்கள், சென்னையில் தான் வசிக்கிறார்கள். மேலும் கடந்த ஒரு மாதமாக படப்பிடிப்பு இல்லாத நிலையில், நடிகைகள் போராட்டத்தில் கலந்து கொள்ளாதது அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

Image result for nadigar sangam protest

Image result for nadigar sangam protest