நடிகைகளுக்கு மார்கெட் இல்லை என்று ஒதுக்குவது சரி இல்லை – தீபிகா…

(FASTGOSSIP|INDIA) பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் தீபிகா படுகோனே, திருமணமான நடிகைகளை ஒதுக்குவது சரியல்ல என்று கூறியிருக்கிறார்.

இந்தியில் முன்னணி நடிகையான தீபிகா படுகோனே, ரஜினிகாந்த் ஜோடியாக கோச்சடையான் படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கிடையே பிரபலமானார்.

பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை மணந்து திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து நடித்து வருகிறார் தீபிகா படுகோனே

அவர் அளித்த பேட்டியில்:

திருமணமான நடிகைகளுக்கு மார்க்கெட் இல்லை என்று ஒதுக்குவது சரி இல்லை. திருமணம் நடிகைகள் மார்க்கெட்டில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. எல்லோரும் திருமணம் செய்துதான் ஆகவேண்டும். திருமணம் ஆனதும் சினிமா தொழில் ஸ்தம்பித்து போய்விடாது. திருமணமான நடிகைகளின் படங்களுக்கு வசூல் குறையும் என்பதை ஏற்கமாட்டேன் என தீபிகா படுகோனே கூறியுள்ளார்.

திருமணத்துக்கு பிறகு நடிக்க வேண்டாம் என்பது சிலரது விருப்பமாக இருக்கலாம். நீண்ட நாட்கள் நடித்து சலிப்பு ஏற்பட்டு சொந்த வாழ்க்கை திருமண பந்தம் போன்றவற்றை சந்தோஷமாக அனுபவிக்க சினிமாவை விட்டு ஒதுங்க நினைக்கலாம்.
ஆனால் இப்போதைய பெண்கள் அப்படி இல்லை. திருமணத்துக்கு பிறகும் நடிக்கிறார்கள் இவ்வாறு தீபிகா படுகோனே கூறினார்.