இலங்கையின் பிரபல நடிகையும் அரசியல்வாதியுமான அனார்கலி ஆகர்ஷாவுக்கு சொந்தமான ஹோட்டல் தொடர்பில் சர்ச்சைக்குரிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ வழங்கிய அரசாங்கத்திற்கு சொந்தமான காணியில், அனார்கலி ஹோட்டல் நிர்மாணித்துள்ளதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
2013ம் இலங்கையில் நடைபெற்ற பொதுநலவாய மாநாட்டின் போது அனார்கலி ஆகர்ஷா மற்றும் முன்னாள் அமைச்சரான ரோசி சேனாநாயக்கவின் மகளான மாயா சேனாநாயக்க தொடர்பில் நிதி மோசடி விசாரணை பிரிவு அவதானம் செலுத்தி வருகிறது.
பொதுநலவாய அரச தலைவர்களின் கூட்டம் முன்னாள் கண்கானிப்பு உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவின் கண்கானிப்பின் கீழ் இந்த ஏற்பாடு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவரது தலைமைத்துவத்தில் அதற்காக அலுவலகம் ஒன்று நிர்மாணிக்கப்பட்டிருந்தது.
அனார்கலி தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார். இந்நிலையில் அவரினால் கொல்கல பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஹோட்டலின் கட்டுமான நடவடிக்கைகளுக்கு பணம் கிடைத்த முறை தொடர்பில் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த ஹோட்டலை நிர்மாணிப்பதற்கு அரசாங்கம் இடம் ஒன்று பயன்படுத்தப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. குறித்த இடத்தை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச வழங்கியுள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
அத்துடன் அனார்கலிக்கு தொலைக்காட்சி ஒளிபரப்பு அனுமதி பத்தரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் நிதி மோசடி விசாரணை பிரிவு தகவல் வட்டாரங்கள் ஊடாக தெரியவந்துள்ளது.