நடிகை ஆலியா பட் குடும்பத்தினை சுட்டுப் பொசுக்குவோம் என கொலை மிரட்டல்…

தொலைப்பேசி வழியாகத் தனக்குக் கொலை மிரட்டல் அழைப்பு வந்ததாக பிரபல பாலிவுட் இயக்குநர் மகேஷ் பட் காவல்துறையில் முறைப்பாடு அளித்துள்ளார்.

நேற்று முன்தினம் இரவு தனக்கு ஒருவர் போன் செய்தார்.

அப்போது, தான் அந்த நபருக்கு ரூ. 50 லட்சம் தரவேண்டும் என்றும் லக்னோவைச் சேர்ந்த ஒரு வங்கியில் பணத்தை வைப்பு செய்யாவிட்டால் தன்னையும் தன் மனைவி சோனி ரஸ்தான், மகள் ஆலியா பட் ஆகியோரைக் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டல் விடுக்கப்பட்டதாக மகேஷ் பட் கூறியுள்ளார்.

முக்கியமாகப் பணம் தர மறுத்தால் மனைவி, மகளைத் துப்பாக்கியால் சுட்டுப் பொசுக்கிவிடுவோம் என்றும் மகேஷ் பட் மிரட்டப்பட்டுள்ளார்.

முதலில் இந்தத் தொலைப்பேசி அழைப்பை ஏதோ ஒரு வேடிக்கையான அழைப்பாகக் கருதியுள்ளார் மகேஷ் பட். ஆனால் பேசும்போது மிகுந்தத் தீவிரத்துடனும் மிரட்டல் தொனியுடனும் பேசியதோடு கொலை மிரட்டலும் விடுக்கப்பட்டதால் வேறு வழியின்றி ஜூஹூ காவல் நிலையத்தில் அவர் முறைப்பாடு செய்தார்.

தற்போது மகேஷ் பட் குடும்பத்துக்கு பொலிஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.