சபாநாயகர் சிவபிரசாத்ராவ் நடவடிக்கையை எதிர்த்து ரோஜா ஐதராபாத் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு விசாரணை வேண்டுமென்றே தாமதப்படுத்துவதாக கூறி சுப்ரீம் கோர்ட்டில் ரோஜா மனு செய்தார்.
இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, ‘‘ரோஜா வழக்கை விசாரித்து 23–ந் திகதி தீர்ப்பு வழங்க வேண்டும்’’ என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
சுப்ரீம்கோர்ட்டு உத்தரவு படி ரோஜா வழக்கு விசாரணை ஐகோர்ட்டு நீதிபதி ராமலிங்கேஸ்வரராவ் முன்னிலையில் நேற்று எடுத்து கொள்ளப்பட்டது.
ரோஜா தரப்பில், ‘‘சுப்ரீம் கோர்ட்டு மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் ஆஜராகி வாதாடினார். அவர் கூறும் போது, ‘‘சட்டசபை சட்டவிதி 340 துணை விதி 2–ன்படி சஸ்பெண்டு உத்தரவு அரசு கூட்டத்தொடர் வரை மட்டுமே அமல்படுத்த முடியும். ஆனால் ஒரு ஆண்டு இடைநிறுத்தம் செய்ய முடியாது.
சபாநாயகர் அதிகாரத்தில் நான் தலையிடவில்லை. ஆனால் சட்டவிதியை சபாநாயகர் சரியாக கடைபிடிக்கவில்லை என்பதால் அதில் கோர்ட்டு தலையிட வேண்டிய அவசியம் வந்து உள்ளது. எனது கட்சிக்காரருக்கு வழங்கப்பட்ட தண்டனை நியாயமற்றது என்றார்.
சட்டமன்ற செயலாளர் தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் தம்மாரிவாட்டி ஸ்ரீனிவாஸ் ஆஜராகி வாதாடினார்.
மதியம் 12 மணிக்கு தொடங்கிய வழக்கறிஞர்கள் வாதம் மாலை 4.30 மணி வரை நீடித்தது.
இரு தரப்பு வழக்கறிஞர்கள் வாதம் முடிவடைந்ததால் இந்த வழக்கில் (நாளை) இன்று தீர்ப்பு வழங்கப்படும் என்று இந்த தீர்ப்பை நீதிபதி அறிவித்தார். ஆந்திர அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.