பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்பட்டால் அதனை தோற்கடிப்பது குறித்து நேற்று(19) அலறி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் குழு யோசனை ஒன்றினை முன்வைத்துள்ளது.
மேலும், ஐக்கிய தேசியக் கட்சியின் சீர்திருத்தக் குழுவின் அறிக்கை பிரதமரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.