நம்பிக்கையில்லா தீர்மனத்திற்கு நாம் தயார்

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்நோக்க அரசாங்கம் தயார் நிலையில் உள்ளதென அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா தெரிவித்துள்ளார்.

அவ்வாறான நம்பிக்கையில்லா தீர்மானம் ஒன்றையே ஐக்கிய தேசியக் கட்சி எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில் ஊழல் மோசடிகாரர்களுக்கு தேவையான வகையில் அரசாங்கத்தை கவிழ்க்க இடமளிக்க முடியாது.

கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் பல கோடி ரூபா மோசடி செய்தவர்கள் இந்த அரசாங்கத்தை கவிழ்க்க முயற்சிக்கின்றனர் எனவும் தெரிவித்தார்.