நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் நடிகை நயன்தாரா நடித்து வரும் படம் கோலமாவு கோகிலா.
இந்த படத்தில் இடம் பெற்றுள்ள எனக்கு கல்யாண வயசு வந்திருச்சி பாடல் பட்டிதொட்டி எங்கும் பட்டையை கிளப்பியது. தற்போது கோலமாவு கோகிலா படத்தின் அனைத்து பாடல்களும் வெளியான நிலையில் அதில் ஒரு பாடலை நயன்தாராவின் காதலர் இயக்குநர் விக்னேஷ் சிவன் பாடியுள்ளார்.
இந்நிலையில் படத்தின் ட்ரெய்லரும் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.