நானும் ரௌடிதான் இயக்குனர் விக்னேஷ் சிவன், தன்னுடைய பிறந்த நாளை நயன்தாராவுடன் அமெரிக்காவில் கொண்டாடியுள்ளார்.
ஆரம்பத்தில் நயன்தாராவும், சிம்புவும் காதலிப்பதாக கூறப்பட்ட பின்னர் பிரபுதேவாவுடன் நெருங்கி பழகினார். அவரை திருமணம் செய்து கொள்வதற்காக நயன்தாரா மதம் மாறியதாகவும் செய்திகள் வெளியாகின.
தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருவதாக சொல்லப்படுகிறது. சென்னை எழும்பூரில் உள்ள ஒரு அடுக்குமாடி வீட்டில் இருவரும் தங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதை அவர்கள் மறுக்க வில்லை.
சில மாதங்களுக்கு முன்பு நயன்தாரா விக்னேஷ் சிவனுடன் ரோம் நகருக்கு சென்று, போப் பிரான்சிஸிடம் ஆசி பெற்றார்கள்.
பின்னர் இருவரும் மோதிரம் மாற்றி ரகசிய திருமணம் செய்து கொண்டதாகவும் தகவல் வெளியாகின.
நேற்று(18) விக்னேஷ் சிவன் பிறந்தநாள். இதை இருவரும் கோலாகலமாக கொண்டாட முடிவு செய்தனர். இதற்காக கடந்த வாரம் நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் அமெரிக்காவின் நியூயார்க் நகரின் பல்வேறு இடங்களுக்கு ஜோடியாக சென்று வந்தனர்.
இந்த புகைப்படங்களை நயன்தாரா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். நேற்று(18) விக்னேஷ் சிவன் பிறந்தநாளை நயன்தாரா ஜோடியாக கேக் வெட்டி கோலாகலமாக கொண்டாடி மகிழ்ந்தார்.
இது பற்றி நயன்தாரா அவரது டுவிட்டர் பக்கத்தில், ‘விக்னேஷ் சிவனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். நாங்கள் புன்னகையுடன் பார்த்தோம். எல்லாமே மகிழ்ச்சி. கடவுள் அவரை ஆசீர்வதிக்கட்டும். இந்த ஆண்டு மிகச்சிறந்த ஆண்டாக அமையட்டும். இது மிகவும் மகிழ்ச்சியான பிறந்தநாள். உங்கள் ரசிகர்கள் உங்களை தொடர்பவர்கள் அனைவருக்கும் இது சிறப்பான நாள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.