(FASTGOSSIP|INDIA) கொலையுதிர் காலம் படவிழாவில் கலந்துக் கொண்ட ராதாரவி, நயன்தாராவை பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.
” நயன்தாரா ஒரு பக்கம் பேயாகவும் இன்னொரு பக்கம் சீதாவாகவும் நடிக்கிறார். முன்பெல்லாம் சாமி வேஷம் போட வேண்டும் என்றால் கே.ஆர்.விஜயாவை தான் தேடுவார்கள். ஆனால் இப்போது யார் வேண்டுமானாலும் நடிக்கலாம். இப்போது பார்த்தவுடன் கும்பிடத் தோன்றுபவர்களும் நடிக்கலாம், பார்த்தவுடன் கூப்பிடத் தோன்றுபவர்களும் நடிக்கலாம் என ராதாரவி பேசியுள்ளார்.
ராதாரவியின் இந்த சர்ச்சை பேச்சுக்கும் நயன்தாராவின் காதலரும், இயக்குனருமான விக்னேஷ் சிவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
‘ஒரு பாரம்பரியமான குடும்பத்திலிருந்து வந்தவரிடம் பேசிய அருவருப்பான கருத்துகளுக்கு எதிராக யார் நடவடிக்கை எடுப்பார்களோ? யார் எனது கண்டன குரலுக்கு ஆதரவு கொடுப்பார்களோ? மூளையற்ற நபர், தன் மீதான கவனத்தை ஈர்க்க வேண்டும் என்பதற்காக இதனை செய்கிறார் என விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.
மேலும், இதில் வேதனையளிக்கும் விஷயம், அவருடைய கீழ்தரமான கருத்தை அங்கிருந்தவர்கள் கைத்தட்டி, சிரித்து கேட்பது. இப்படி ஒரு நிகழ்ச்சி, முடிவுறாத ஒரு படத்துக்காக நடக்கிறது என்று எங்கள் யாருக்கும் தெரியாது.
தேவையற்ற நபர்கள் கலந்து கொண்டு என்ன பேசுகிறோம் என்று தெரியாமலயே பேசியுள்ளனர். இதுதான் ஒரு படத்தை புரமோட் செய்யும் விதம் என்றால் இனி இது போன்ற நிகழ்ச்சிகளில் இருந்து விலகி நிற்பதே நலம் என கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும், என்ன நடந்தாலும் அவர் மீது நடிகர் சங்கத்தை சேர்ந்தவர்களோ அல்லது வேறு எந்த சங்கத்தைச் சேர்ந்தவர்களோ நடவடிக்கை எடுக்கப்போவதில்லை. பரிதாப நிலை என்று காட்டமாக பதிவு செய்துள்ளார்.
ராதாரவியின் பேச்சுக்கு பல்வேறு தரப்பில் கண்டனங்கள் டுவிட்டரில் தெரிவிக்கப்பட்டு வருகிறது.