நல்லாட்சிக்கு ஒத்துழைக்காத சு.கட்சியினருக்கும் ஜனாதிபதிக்குமான கலந்துரையாடல் இன்று!

தேசிய அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்காத ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களுக்கும் இன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் இன்று(15) விசேட சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று மாலை 5.00 மணிக்கு இக்குறித்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஒரு தொகுதியினர், நாடாளுமன்றத்தில் எதிர்கட்சியில் இருந்து செயற்படும் முறை தொடர்பில் இதன் போது கலந்துரையாடல் மேற்கொள்ளப்படவுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆகிய இரண்டும் பிரதான பங்கு கட்சிகளாகும்.

எப்படியிருப்பினும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகிய ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் சிலர் தேசிய அரசாங்கத்தில் இணைந்து அமைச்சு பதவிகள் பெற்றுக்கொண்டுள்ளனர்.

அதற்கமைய ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஏனைய உறுப்பினர்கள் எதிர்கட்சியில் செயற்படுவதில் ஒருவித சிக்கல் நிலைமை ஒன்று உருவாகியுள்ளது.

இந்நிலையில் இன்றைய சந்திப்பின் போது இது குறித்து கலந்துரையாடல் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(riz)