நல்லாட்சியிடமிருந்து அரச ஊழியர்களுக்கு மேலதிகமாக 20% கொடுப்பனவு…

அரச ஊழியர்களுக்கு அடுத்த மாதத்தில் மேலும் ஒரு சம்பள உயர்வு வழங்கப்படவுள்ளதாக பொது நிர்வாக அமைச்சின் நிறுவனங்களுக்கான பணிப்பாளர் நாயகம் டபிள்யு.டி.சோமதாச தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் பெற்றுக் கொடுத்த 10,000 ரூபா சம்பள உயர்வு 5 கட்டங்களாக வருடத்திற்கு வருடம் அரச ஊழியர்களுக்கு உரித்தாகின்றது.

இது 2020 ஆம் ஆண்டு பூர்த்தியாகின்றது. இது தொடர்பான சகல அறிவித்தல்களும், சம்பள அதிகரிப்பு முறைமைகளும், கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட சுற்றுநிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.

10,000 கொடுப்பனவுக்கு மேலதிகமாக 20% கொடுப்பனவு ஒன்றும் ஊழியர்களின் சம்பளத்தில் சேர்க்கப்படும்.

ஒவ்வொரு சம்பள அளவுக்கும் ஏற்ற வகையில் ஊழியர்களின் அடுத்த மாத சம்பளத்தில் உயர்வு வழங்கப்படும் என பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.

 

#G-Reeshma..