நல்லாட்சி அரசாங்கத்தை 2020ஆம் ஆண்டு வரை அசைக்க முடியாது..

இலங்கையில் உருவாக்கப்பட்டுள்ள நல்லாட்சி அரசாங்கத்தை 2020ஆம் ஆண்டுவரை அசைக்க முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மஹஓய நீர்வழங்கல் திட்டத்தை பொதுமக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போது ஜனாதிபதி இந்த கருத்தை வெளியிட்டார்.

தேசிய அரசாங்கம் நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்தி நாட்டை அபிவிருத்தி செய்து வருகிறது. இந்த குறிக்கோளில் எவ்வித மாற்றங்கலும் ஏற்படுத்தபோவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.