பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக, நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு குறித்த மனு தொடர்பான தீர்ப்பு இன்று(08) வழங்கப்பட உள்ள நிலையில் அவர் சுகயீனம் காரணமாக ஸ்ரீ ஜெயவர்தன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை சதியாக இருக்கலாம் என தகவல்கள் சமூக வலைதளங்களில் பரிமாறப்படுகின்றது.
பலங்கொட, கூருகள எதிர்ப்பில் ஆரம்பித்து, அழுத்தகம கலவரம் மற்றும் கண்டி கலவரம் வரையில் இனவாதம் தலை தூக்கி ஆடியிருந்த நிலையில் நல்லாட்சி அரசு இனவாதமாகவோ அல்லது நீதிமன்ற அவமதிப்போ எதுக்குமே குறித்த தேரருக்கு சட்டத்தின் பிரகாரம் தண்டனை வழங்காது காலம் தாழ்த்துவது குறித்தும் மக்களிடையே பெரும் அதிருப்தி நிலவி வருகின்றது.
இந்நிலையில் வயிற்று வழியால் வைத்தியசாலையில் ஞானசார தேரர் அனுமதிக்கப்பட்டுள்ளமையும் சதியே என ஊடகங்களும் பரவலாக பேசுகின்றமை குறிப்பிடத்தக்கது.