நல்லாட்சி அரசு எதிர்கொள்ளவிருக்கும் முதலாவது தேர்தலானது ஓர் சர்வஜன வாக்கெடுப்பாக அமையும் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சில் நேற்று(25) இடம்பெற்ற கூட்டத்தின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இங்கு அவர் தொடர்ந்தும் கூறுகையில்;
புதிய அரசியல் சாசனம் குறித்த யோசனை நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டதன் பின்னர், சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. இதன் பின்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மற்றும் மாகாணசபைத் தேர்தலும் நடைபெறும்.
அனைத்து உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களையும், அனைத்து மாகாணசபைத் தேர்தல்களையும் ஒரே தினத்தில் நடத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது என அமைச்சர் ராஜித சேனாரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.