“நல்வாழ்த்துக்கள்.. மீண்டும் சந்திக்க மாட்டோம்” – மாலிங்க கூறுகிறார்.

 

தனது இடத்தினை நிரப்புவதற்காக திறமையான வீரர்கள் முன்னேறி வருவதாக திலகரத்ன டில்ஷான் தனது பிரியாவிடையின் போது தெரிவித்திருந்தார்.

அவ்வாறான, புதுமுகங்களுக்கு இடம் ஒதுக்கி தான் ஓய்வு பெறுவது சந்தோசம் எனவும் தெரிவித்திருந்தார்.

ஆனால், டில்ஷான் இற்கு நிகரான வீரரொருவர் மீண்டும் கிடைக்க மாட்டார் என லசித் மாலிங்க தெரிவிக்கிறார்.

அணியின் நட்சத்திர வீரரான டில்ஷானின் பங்கானது அணிக்கு தேவையான ஒவ்வொரு நேரமும் ஒழுங்காக வழங்கப்பட்டமை குறித்து மாலிங்க கோடிட்டு சுட்டிக்காட்டுகிறார்.

இதன் பிற்பாடு திறமையான வீரரொருவர் அணிக்கு வந்தாலும், அது டில்ஷானினை போன்று அமையாது.

எனினும், டில்ஷானின் அடுத்த கட்ட முயற்சிகளுக்கு வாழ்த்துகிறேன் என லசித் மாலிங்க மேலும் தெரிவிக்கிறார்.