நவாஸ் ஷரீப்பின் உடல்நிலை மோசம் – பாகிஸ்தான் அரசு தலைமை வைத்தியசாலையில் அனுமதி…

பாகிஸ்தான் நாட்டு முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரீப்பின் உடல்நிலை பாதிக்கப்பட்டு உள்ளதால், சிறையில் இருந்து அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிறையில் அடைக்கப்பட்டதன் பின்னர் நவாஸ் ஷரிப்புக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. சிறுநீரக பாதிப்புக்காக அடிடாலா சிறைக்குள் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதற்கிடையே, நவாஸ் ஷரீப்புக்கு சிறுநீரகம் பாதிப்பு தீவிரமடைந்துள்ளதால் உடனடியாக அவரை வைத்தியசாலையில் சேர்த்து சிகிச்சை அளிக்க வேண்டும் என வைத்தியர்கள் பரிந்துரைத்தனர்.

இந்நிலையில், அடிடாலா சிறைச்சாலையில் இருந்து விமானம் மூலம் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்துக்கு அனுப்பப்பட்ட நவாஸ் ஷரீப், பாகிஸ்தான் அரசு தலைமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

லண்டன் அவன்பில்ட் குடியிருப்பு தொடர்பான ஊழல் வழக்கில் 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரீப், அவரது மகள் மரியம் நவாஸ் மற்றும் மருமகன் சப்தர் ஆகியோர் கடந்த 13 ஆம் திகதி முதல் ராவல்பிண்டி நகரில் உள்ள அடிடாலா சிறையில் அடைத்து வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.