நவாஸ் ஷெரீப்பின் உயிரைக் குறிவைக்கின்றதா தீவிரவாதம்?

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை தாக்கும் முயற்சியாக அவர் காரை குறிவைத்து வந்த கார் ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரதமர்  நவாஸ் ஷெரீப் முர்ரேயில் உள்ள சுற்றுலா ரிசார்டில் இருந்து தனது குடும்பத்துடன்  தலைநகரான இஸ்லாமாபாத் திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது குறித்த கார் பிரதமரின் பாதுகாப்பு வாகனங்களை முந்திக்கொண்டு வர முயன்றுள்ளது. ஆனால் பாதுகாப்பு வாகனங்கள் அந்த காரை பிரதமரின் காரின் பக்கம் போகவிடாமல் தடுத்துவிட்டன.

இச்சம்பவத்தில் பாதுகாப்பு வாகனங்களும் சந்தேகத்துகுறிய அந்த காரும் மோதிக்கொள்ளும் நிலை ஏற்பட்டது. தற்போது அந்த காரை ஓட்டிவந்த ஓட்டுனர் கைது செய்யப்பட்டு அவரது வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு அவரிடம் விசாரனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

(riz)