நவீன விவசாய கண்காட்சி நாளை ஆரம்பம்…

நவீன விவசாய கண்காட்சி – 2018 கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நாளை ஆரம்பமாகவுள்ளது.

நாட்டில் புதிய விவசாய கலாசாரத்தை ஏற்படுத்தும் நோக்கில் விவசாய அமைச்சு ஏற்பாடு செய்துள்ள இந்த கண்காடசி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஆரம்பமாகவுள்ளது

நாளை முதல் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 9 முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

தேசிய மற்றும் சர்வதேச விவசாயத்துறைகளைபிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் பல நிறுவனங்கள் இதில் பங்;கேற்கவுள்ளன.

விவசாய அபிவிருத்திக்காக பயன்படுத்தும் நவீன விவசாய தொழில்நுட்பமுறைகளை இலங்கை விவசாயிகளுக்கு அறிமுகப்படுத்துவது மற்றும் காய்கறி பழவகைகளை சர்வதேச சந்தைக்கு கொண்டு செல்வதற்கு வழிவகை செய்வது இதன் நோக்கமாகும்.

காட்சி கூடங்களை மக்கள் இலவசமாக பார்க்க முடியும். காட்சிகூடம், உணவு விற்பனை நிலையம் பழங்கள் மற்றும் மரக்கறி விற்பனை நிலையம் போன்றவை கண்காட்சியில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.