நவெஸ்கா லேடி (Naverska Lady) கப்பலில் கொண்டு வரப்பட்ட பெற்றோலுக்கான மாதிரி பரிசோதனைகள் நிறைவடைந்துள்ளதாக, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இதன்படி, அவை நுகர்வுக்கு தகுதியுடையவை என்பதால், இன்று(09) இரவுக்குள் இதனை விநியோகிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.