நவ சமசமாஜ கட்சியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்னவிற்கு இன்றைய தினம் கிருலப்பனை பொலிஸ் அழைப்பு விடுத்துள்ளது.
மாளிகாவத்தையில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் இன முறுகல் சம்பவமொன்றின் போது வட்டரக்க விஜித தேரரை பாதுகாக்கும் நோக்கில் பொலிஸாரிற்கு இடையூறு விளைவித்து செயற்பட்டமை தொடர்பில் விசாரிக்கவே இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் விக்கிரமபாகு கருணாரத்ன குறிப்பிடுகையில்,
இனவாதத்திற்கு எதிராகவே நான் செயற்பட்டேன். ஆனாலும் என்னை கைது செய்யும் நோக்கிலேயே இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்றார்.
இதன்பிரகாரம் இன்று காலை 10 மணிக்கு கிருலப்பனை பொலிஸ் நிலையத்திற்கு வருகை தருமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது என்றார்.