சமந்தா தற்போது ஆந்திர சினிமாவின் முன்னணி நட்சத்திரக் குடும்பமான அக்கிநேனி வீட்டு மருமகளாக ஐக்கியமாகிவிட்டார். ட்விட்டரிலும் தனது பெயரை ‘சமந்தா அக்கிநேனி’ என மாற்றிக்கொண்டிருக்கும் இந்த புதுமணப் பெண், தமிழ், தெலுங்கு சினிமாவில் இன்று அறிமுகமான கதாநாயகிபோல இளமை குறையாமல் வலம் வந்துகொண்டிருக்கிறார்.
திருமணமாகி விட்டாலும் எனது திரையுலக வாழ்வில் எந்தவொரு மாற்றமும் நிகழாது என நடிகை சமந்தா கூறியிருக்கிறார். மேலும், படங்களின் தேர்வைப் பொறுத்தவரை, நானே நிறைய மாறியிருக்கிறேன். நடிப்பில் 8 ஆண்டுகளைக் கடந்திருப்பதால் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க விருப்பப்படுகிறேன். மிகவும் சவாலான கதாபாத்திரங்களில் நடிக்க ஆசை என சமந்தா கூறியுள்ளார்.
சமந்தா தனது கணவர் நாக சைதன்யா பற்றி: திருமணத்துக்குப் பிறகு நான் நடிப்பை விட்டுக் கொடுத்து விடுவேன் என்று நாக சைதன்யா மிகுந்த கவலையாக இருந்தார். தமிழ், தெலுங்கு திரைப்பட உலகில் திருமணம் ஆன பெண்களுக்கு நிலவும் பாதுகாப்பற்ற தன்மையை நான் அகற்ற வேண்டும். திருமணத்துக்குப் பிறகு முன்பைவிட பிஸியாக நான் நடிப்பதை இந்த உலகம் காண வேண்டும் என சைதன்யா விரும்பினார். நிச்சயமற்ற தன்மை திரையுலகில்கூட நிலவலாம், குடும்பத்தில் என்னைப் பாதுகாப்பாக உணரவைத்துதான் அவர் எனக்குத் தந்திருக்கும் சிறந்த பரிசு என சமந்தா கூறியுள்ளார்.