நாடளாவிய ரீதியில் தபால் தொழிற் சங்க ஒன்றியம் 48 மணிநேர பணிப்பகிஷ்கரிப்பில்..

ஒன்றிணைந்த தபால் தொழிற் சங்க ஒன்றியம் இன்று(19) நள்ளிரவு முதல் 48 மணிநேர பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளது.

ஆட்சேர்ப்பு மற்றும் பதவி உயர்வு முறைமைகளில் நிலவும் குறைபாடுகளை நிவர்த்தி செய்வது உள்ளிட்ட நான்கு கோரிக்கைகளை முன்வைத்தே இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக அந்த ஒன்றியத்தின் இணைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார்.

தபால் சேவையளார்களின் கோரிக்கைகள் தொடர்பில் நேற்று முன்தினம் இடம்பெற்ற கலந்துரையாடலில் அமைச்சர் எம்.எம். அப்துல் ஹலீம் சரியான தீர்வொன்றை வழங்காததால் இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுவதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

இந்த பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக நாடுமுழுவதுமுள்ள தபால் மற்றும் தபால் அஞ்சல் நிலையங்களில் சேவைகள் முடங்கும் என ஒன்றிணைந்த தபால் தொழிற் சங்க ஒன்றியத்தின் இணைப்பாளர் சிந்தக பண்டார எச்சரித்துள்ளார்.