வைத்தியர்கள் நியமனம் தொடர்பில் இடம் பெறுவதாக கூறப்படும் முறைகேடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாளை நாடளாவிய ரீதியில் பணிப் பகிஸ்கரிப்பை மேற்கொள்ளவுள்ளதாக, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் நவின் சொய்சா இன்று(30) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தொிவித்துள்ளார்.
எனினும், அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட கொழும்பு, கம்பஹா, கேகாலை ஆகிய மாவட்டங்கள் மற்றும் சிறுநீரக நோயாளர்களின் விடுதி, புற்றுநோய் வைத்தியசாலை, காசல் வைத்தியசாலை உள்ளிட்ட அத்தியவசிய வைத்தியசாலைகளில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படாது என, அவா் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, நாளை காலை 08.00 மணி முதல் நண்பகல் 12.00 மணிவரை இவ்வாறு அடையாளப் பணிப் பகிஸ்கரிப்பு இடம்பெறும் என அவர் தொிவித்துள்ளார்.