நாடாளாவிய ரீதியில் சைட்டம் இரவு தீப்பற்றியது இவ்வாறுதான்.. (Photos)

மாலபே சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரியின் விவகாரம் தொடர்பில் மருத்துவ பீட மாணவர்கள் நேற்று(30) இரவு “தீப்பற்றிய இரவு” என்னும் தொனிப்பொருளில் போராட்டத்தை மலையகத்தில் முன்னெடுத்துள்ளனர்.

ஹட்டன், நுவரெலியா, தலவாக்கலை போன்ற பகுதிகளிலும் போராட்டம் நடத்தியுள்ளனர்.

இப்போராட்டத்தில் தீப்பந்தங்களை ஏந்திய வண்ணம் கோஷங்களை எழுப்பி, 50ற்கும் அதிகமானோர் ஈடுப்பட்டனர்.

அதேவேளையில் சைட்டம் தனியார் மருத்துவ கல்லூயின் பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வரும் முகமாக மருத்துவபீட மாணவர்கள் கொழும்பில் உண்ணாவிரத போராட்டத்திலும் ஈடுப்பட்டுள்ளனர். இவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடதக்கது.