நாடாளுமன்றத்தில் மோதல். விசாரணைக்கு விசேட குழு

நாடா­ளு­மன்­றத்தில் இன்று எம்.பி.க்­க­ளி­டையே ஏற்­பட்ட கைக­லப்பில் உறுப்­பி­னர்கள் சிலர் காய­ம­டைந்த நிலையில் ஐ.தே.க. எம்.பி.யான சந்தீத் சம­ர­சிங்க மேல­திக சிகிச்­சைக்­காக உட­ன­டி­யாக வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்டார்

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்­க்ஷவின் விசேட அதி­ர­டிப்­படை உள்­ளிட்ட இரா­ணு­வத்தின் பாது­காப்பு நீக்­கப்­பட்டு பொலிஸ் பாது­காப்பு மட்டும் வழங்­கப்­பட்­ட­மையை கடு­மை­யாக கண்­டித்த அவ­ரது ஆத­ரவு அணி­யி­ன­ருக்கும் ஆளும் தரப்­புக்­கு­மி­டை­யே இன்று சபையில் ஏற்­பட்ட வாய்த்­தர்க்கம் திடீ­ரென கைக­லப்­பாக மாறிய போதே நாடா­ளு­மன்ற உறுப்­பினர் ஒருவர் காய­ம­டைந்து கொழும்பு தேசிய வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்டார்.

இதேவேளை, நாடாளுமன்ற சபா மண்டபத்தில் இடம்பெற்ற இம் மோதல் சம்பவம் தொடர்பில் விசாரிப்பதற்கு பிரதி சபாநாயகர் மற்றும் குழுக்களின் பிரதித் தலைமையில் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் கருஜெயசூரிய தெரிவித்தார்.