சிங்கள பத்திரிகையொன்று வெளியிட்டுள்ள செய்தியில் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இது குறித்து வெளியிட்டுள்ள செய்தியில் நாடாளுமன்ற வளாகத்திற்குள் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களை சில நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் சிரேஸ்ட மற்றும் வயது முதிர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களினால் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் துன்புறுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த குற்றச்சாட்டை தொடர்ந்து அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒழுக்கத்துடன் செயற்படுமாறு அரசாங்கத்தின் உயர் மட்டத்தினரும் அரசியல் கட்சிகளும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன.
75 வயதான நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் அண்மையில் நாடாளுமன்ற நூலகத்திற்கு அருகாமையில் வைத்து பெண் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை ஆபாசமாக கிண்டல் செய்துள்ளதாகவும் அந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினர் ஆத்திரமுற்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எனினும் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் இளம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மிகவும் ஒழுக்கத்துடன் செயற்பட்டு வருவதாகவும் வயது முதிர்ந்தவர்களின் சில்மிசங்கள் அதிகளவில் காணப்படுவதாகவும் அந்த பத்திரிகை மேலும் தெரிவித்தள்ளது