நாடாளுமன்றில் மருமகனை காப்பாறிய மாமானார்!

அமைச்சர் நவின் திஸாநாயக்கவிடம், ஜேவிபியின் நாடாளுமன்ற உறுப்பினர் கேட்கவிருத்த கேள்விக்கு சபாநாயகர் கரு ஜெயசூரிய அனுமதி வழங்கவில்லை.

நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற கேள்விப்பதில் நேரத்தின்போது, தேயிலை சபைக்கும் நிதியமைச்சுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள முறுகல் தொடர்பில் சுனில் ஹந்துன்நெத்தி, நவின் திஸாநாயக்கவிடம் கேள்வி எழுப்பினார். இதன்போது உப கேள்விகளையும் அவர் தொடுத்தார்.

இந்தநிலையில் நவின் திஸாநாயக்க, நிதியமைச்சுடன் ஏற்பட்ட முறுகலால் பதவிவிலகப் போவதாக தெரிவித்த கருத்து தொடர்பில் உப கேள்வியை தொடுக்க, சபாநாயகர் கரு ஜெயசூரியவின் அனுமதியை கோரினார்

எனினும் அது நேரடிக்கேள்வியுடன் தொடர்புப்படவில்லை என்று கூறி சபாநாயக்கர் அதற்கு அனுமதி மறுத்தார்.

இதன்போது சபையில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாமானார், மருமகனை காப்பாற்றி விட்டார் என்று நகைச்சுவையாக கூறியமையை கேட்கக்கூடியதாக இருந்தது

எனினும் இதனை செவிமடுத்த சபாநாயகர் உறவுமுறை பிரச்சினை நாடாளுமன்றத்தில் செல்லுபடியாகாது என்று தெரிவித்தார்.