நாடாளுமன்ற உறுப்பினரின் வாகனம் மோதி பெண் பலி

திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஷிராணி விஜேவிக்ரமவின் வாகனம் மோதியதில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று இரவு இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.