நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் வழங்கப்படவுள்ள கொடுப்பனவு குறித்த யோசனை நாடாளுமன்றில்..

நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் வழங்கப்படவுள்ள அலுவலக கொடுப்பனவு ஒரு லட்சம் ரூபாய் மற்றும் கூட்டங்களுக்கான கொடுப்பனவு 2,500 ரூபா தொடர்பில் யோசனைகள் எதிர்வரும் 10 ஆம் திகதி நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளது.

இதனை நாடாளுமன்ற பிரதி செயலாளர் நில் இத்தவல தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு அலுவலக கொடுப்பனவாக ஒரு லட்சம் ரூபாயும் கூட்டங்களுக்கான கொடுப்பனவாக 2,500 ரூபாவும் வழங்க கடந்த சில தினங்களுக்கு முன்னர் அமைச்சரவையின் தீர்மானம் பெறப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.