நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன மற்றும் அவரது மனைவுக்கு எதிரான வழக்கு விசாரணை இம்மாத இறுதியில்..

கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க மற்றும் அவருடைய மனைவி ஆகியோருக்கு எதிரான வழக்கு விசாரணை எதிர்வரும் 30ஆம் திகதி ஆரம்பமாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தகர் ஒருவரை மிரட்டி, 64 மில்லியன் ரூபாய்களை கோரிய குற்றச்சாட்டு உட்பட்ட மூன்று குற்றச்சாட்டுக்கள் இவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளன.

இந்த வழக்கின் மூன்றாம் எதிரியான நரேஸ்குமார் பாரீக் நீதிமன்றத்தில் இன்னும் ஆஜராகவில்லை.

இந்நிலையில் எதிர்வரும் 30ஆம் திகதி முதல் விசாரணைகளை ஆரம்பிக்க கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி மணிலால் வைத்தியதிலக்க உத்தரவிட்டுள்ளார்.

இந்த வழக்கில் தற்போது பிரசன்னவும் மனைவியும் பிணையில் உள்ளனர்.

இந்த வழக்கில் 35 ஆவணங்கள் உட்பட்ட 65 சாட்சியங்கள் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளன.