நாடாளுமன்ற கைகலப்பு – நண்பகலுக்கு முன் விசாரணை அறிக்கை

பாராளுமன்றத்தில் எம்.பிக்களுக்கிடையில் ஏற்பட்ட கைகலப்புத் தொடர்பில் இன்று(04) நண்பகல் 12 மணிக்கு முன்னர் விசாரணை அறிக்கை சபாநாயகரிடம் கையளிக்கப்படவிருப்பதாக பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் குழப்பம் ஏற்பட்ட சமயத்தில் பதிவான வீடியோ காட்சிகள் மற்றும் ஒலிப்பதிவுகளை அடிப்படையாகக் கொண்டு விசாரணை நடத்தப்படவிருப்பதாகக் குறிப்பிட்ட அவர், விசாரணை அறிக்கைக்கு அமைய பாராளுமன்றத்தின் சட்டத்தை மீறிச் செயற்பட்டவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை சபாநாயகரால் எடுக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.

பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் பிரதி சபாநாயகர் அலுவலகத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.