நாடுதழுவிய மின்சாரத்தடை குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு பிரதமர் உத்தரவு

நேற்று ஏற்பட்ட மின்சாரத் தடை தொடர்பில் உள்ளக மற்றும் வெளிவாரியான விசாரணைகளை மேற்கொண்டு மிக விரைவாக தமக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

மின்சக்தி மற்றும் சக்தி வலுத்துறை அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய குறித்த பிரிவினருக்கு இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். நேற்று மாலை நாடு முழுவதும் சுமார் 3 மணி நேரம் மின்சார விநியோக தடை ஏற்பட்டது.

லக்சபான மின்னுற்பத்தி நிலையத்தில் இருந்து பொல்பிட்டிய ஊடான கொலன்னாவவிற்கு மின்சாரத்தை வழங்கும் மின்மார்க்கத்தில் மின்னல் தாக்கியமையே இந்நிலை ஏற்பட்ட காரணமாகும்.

இது தொடர்பில் நேற்று மாலை 7 மணியளவில், அமைச்சர் சியம்பலாபிட்டிய தலைமையில் விசேட கூட்டம் இடம்பெற்றது.
இதன்போதே அமைச்சர் பணிப்புரை ஒன்றை விடுத்தார்.

இதனிடையே, இந்த மின்சார விநியோக தடை தொடர்பில் ஆராய்ந்து உடன் அறிக்கை சமர்ப்பிக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் உத்தரவிட்டுள்ளார்.