நாடும் திரும்பும் சந்திரிக்காவிடமிருந்து முக்கிய பிரச்சாரங்கள்

முன்னாள் ஜனாதிபதி திருமதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க இன்று வியாழக்கிழமை நாடு திரும்பவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவர் நாடு திரும்பியதும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் வேட்பு மனு பெற்று கொடுத்தது தொடர்பாக விசேட கருத்துக்களைத் தெரிவிக்கக்கூடும் என்றும் அறிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் நல்லாட்சிக்காக ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்து செயற்பட திட்டமிட்டுள்ள அவர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக தேர்தல் கூட்டங்கள் பலவற்றில் பேசவுள்ளதாகவும் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

(riz)